search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம்
    X

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்பவில்லை.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் இறுதிப்போட்டி மட்டும் பலத்த பாதுகாப்பிற்கிடையே கராச்சியில் நடைபெற்றது.

    இந்நிலையில் வீரர்களிடையே உள்ள அச்சத்தைப் போக்கி, பாகிஸ்தான் மண்ணில் மற்ற நாடுகள் வந்து விளையாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அடுத்த வருடம் நடைபெறும் 3-வது சீசனில் 8 போட்டிகளை லாகூர் மற்றும் கராச்சியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சேர்மனான நஜம் சேதி கூறுகையில் ‘‘அடுத்தமுறை 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்போகிறோம். கராச்சி மற்றும் லாகூரில் தலா நான்கு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

    3-வது தொடரில் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் கட்டாயம் பாகிஸ்தான் வந்து விளையாடுவார்கள். பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்பது அவர்களின் ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இருக்கும். பாகிஸ்தான் வந்து விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் பணம் வழங்கப்படும். நட்சத்திர வீரர்களுக்கு 10 சதவீதம் கொடுக்கப்படும்’’ என்றார்.
    Next Story
    ×