search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது: கோலி
    X

    கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது: கோலி

    கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.

    லண்டன் சென்றதும் இந்திய அணி கேப்டன் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பேட்டியளித்தார். அப்போது இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக கருதப்படும் டோனிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது என்று கூறினார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடைசி நிலை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு தேவை என்பது ஒரு முக்கியமான விஷயம். கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக அளவிளான சுமைகள் வந்து கொண்டிருந்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனக்குத்தானே முற்றிலுமாக  வெளிக்கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், அவருடன் இணைந்து அணியை வெற்றிக்கொண்டு செல்லக்கூடிய சிறந்த வகையில் ஆட்டத்தை முடிக்கும் வீரர்களை பெற்றிருக்கவில்லை.

    கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்த இடத்தில் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா நமக்கு மிகவும் அழகான பலம்.

    நாங்கள் சிறந்த பேலன்ஸ் அணியோடு சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் பேலன்ஸ் அணி. பந்து வீச்சாளர்கள் சிறப்பான அளவில் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்கள். பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சிறந்த ஆல் ரவுண்டர்களை பெற்றுள்ளோம். முக்கியமாக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இந்த தொடருக்கான சிறந்த அணியாக நாங்கள் உள்ளோம்.



    தற்போது ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வந்து செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் உலகத்தின் சிறந்த அணி என்று நினைக்கலாம். ஆனால், நீங்கள் சிறந்த வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தாவிடில், அதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. இதுபோன்ற தொடர்களில், நீங்கள் ஆட்டத்தை அன்றைய நாளில் எப்படி செயல்படுவீர்கள் என்பதை பொறுத்துதான் அணியின் உயர்வு தாழ்வு இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×