search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து: டைட்டிலை நெருங்குகிறது செல்சியா
    X

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து: டைட்டிலை நெருங்குகிறது செல்சியா

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி 2016-17 சீசனின் டைட்டிலை கைப்பற்ற நெருங்கி வந்துள்ளது. தற்போது 84 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி 20 கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான பிரமீயர் லீக் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 ஆட்டங்களில் எந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறதோ, அந்த அணி டைட்டிலை வெல்லும்.

    தற்போது வரை ஏறக்குறைய அனைத்து அணிகளும் 35 போட்டிகளில் விளையாடியுள்ளன. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. மே 23-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

    தற்போது வரை செல்சியா அணி 35 போட்டிகளில் விளையாடி 27 வெற்றி, 4 டிரா மற்றும் ஐந்து தோல்விகள் மூலம் 84 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 35 போட்டிகளில் விளையாடி 23 வெற்றி, 8 டிரா மற்றும் நான்கு தோல்விகளுடன் 77 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் தலா மூன்று போட்டிகள் உள்ளன. மூன்று போட்டியிலும் செல்சியா தோல்வி அல்லது இரண்டு தோல்வி, ஒரு டிரா ஆகி டோட்டன்ஹான் ஹாட்ஸ்பர் மூன்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் டைட்டிலை வெல்ல முடியும். இதற்கு வாய்ப்பே இல்லை.



    34-வது போட்டியில் செல்சியா அணி மிடில்ஸ்புரோ அணியை 3-0 என வீழ்த்தியது. அதேசமயத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பார் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் 0-1 என தோல்வியடைந்தது. இதனால் செல்சியா 7 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    மற்ற முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் 65 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், மான்செஸ்டர் சிட்டி 69 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், லிவர்பூல் 70 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×