search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை வாங்கும் ரியல் மாட்ரிட்
    X

    சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை வாங்கும் ரியல் மாட்ரிட்

    ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் முன்னணி இளம் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.
    பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் வினிசியஸ். 16 வயதே ஆன இவர் அந்நாட்டின் பிளமிங்கோ கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தென்அமெரிக்காவின் 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் 7 கோல்கள் அடித்ததுடன் இரண்டு கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இவரது ஆட்டம் ரியல் மாட்ரிட் அணியை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அவருடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக, ‘மார்கா’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



    தற்போது அவர் விளையாடும் பிளமிங்கோ அணியிடம் இருந்து சுமார் 33 மில்லியன் பவுண்டு கொடுத்து ரியல் மாட்ரிட் வாங்க இருக்கிறது. அப்படி ஒப்பந்தம் கையெழுத்தானால் 2017-18 முடியும்வரை பிளாமிங்கோவில் விளையாடுவார். அதன்பிறகு நேரடியாக ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வார்.

    இதற்கிடையே பார்சிலோனா அணியும் சக நாட்டு வீரரான நெய்மர் மூலம் வலைவிரித்ததாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து போஸ்கொடுக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தது. ஆனாலும், ரியல் மாட்ரிட் அவரை இழுத்துள்ளது.

    Next Story
    ×