search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அனுராக் தாக்கூர்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அனுராக் தாக்கூர்

    லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத விவகாரத்தில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பொறுப்புகளில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி அதிரடியாக நீக்கியது. கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க 4 பேர் கொண்ட புதிய குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    இந்த நிலையில் லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத விவகாரத்தில் அனுராக் தாக்கூர் சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    விசாரணையின் போது அவர் ஐ.சி.சி. தலைவருக்கு கடிதம் எழுதிய தகவலை மறைத்து இருந்தார். பொய்யான தகவலை தெரிவித்ததாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து அனுராக் தாக்கூர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
    Next Story
    ×