search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறில் 18-ந் தேதி புஷ்கரம்
    X

    திருவையாறில் 18-ந் தேதி புஷ்கரம்

    வருகிற 18-ந்தேதி திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றுப் படித்துறையில் காவேரி புஷ்கரம் விழா நடைபெறுகிறது.
    நமது வீடுகளில் உள்ள பூஜை விக்ரகங்களை காவிரியில் தீர்த்தவாரி செய்து கொள்வது நல்லது. இந்த புஷ்கரம் காலத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி செய்து வருவது அல்லது காவிரியிலிருந்து தீர்த்த கலசம் எடுத்துவந்து மூலவருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வது நல்லது.

    இந்த புனித நாள்களில் பொதுமக்கள் பித்ருக்களுக்கு காவிரி ஆற்றங்கரையில் பிண்டம் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சாஸ்திரிகள் கிடைக்காத போது பச்சரிசி, எள் கலந்த மாவு உருண்டை கள் மூன்று செய்து முன்னோர்களை நினைத்து காவிரி ஆற்றில் பிண்டம் விடுவது நல்லது.

    குறிப்பாக கன்னி ராசிக்காரர்ளும், துலாம் ராசிக்காரர்களும் குடும்பத்துடன் காவிரி ஆற்றில் புனித நீராடுவது மிகவும் நல்லது. காவிரி புஷ்கரப் புனித காலத்தில் பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துவந்து வீடுகளில் தெளித்து புனிதப்படுத்திக் கொள்ளலாம்.

    மயிலாடு துறை துலாக் கட்டத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காவிரி மகா புஷ்கரம் மஹோத்சவம் நடைபெறவுள்ளது. வருகிற 18-ந்தேதி திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றுப் படித்துறையில் காவேரி புஷ்கரம் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் யாகங்கள், துறவியர்களின் புனித நீராடல், ஐயாறப்பர் கோயிலின் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி, லலித சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், பாராயணங்கள் மற்றும் காவிரி ஆரத்தி, மாலை சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அகில பாரத துறவியர்கள் சங்கம், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை, மற்றும் திருவையாறு காவேரி புஷ்கரம் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×