வலியே இல்லாமல் மருக்கள் மறைய சில டிப்ஸ்...

வலியே இல்லாமல் மருக்கள் மறைய சில டிப்ஸ்...

Published on
அல்லிசின் பூண்டில் அதிகமாக உள்ளது. இந்த அல்லிசின் மருக்களை உண்டாக்கும் வைரசுடன் போராடும் தன்மை பெற்றது.
பூண்டு சாறை தினமும் மருக்களின் மீது தடவலாம்.
அன்னாசியில் உள்ள என்சைம்கள் மருக்களை எரித்து அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதன் சாறை மருக்களின் மீது தடவலாம்.
மருக்களை வேரோடு அகற்ற ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாம்.
ஒரு காட்டன் பஞ்சு அல்லது துணியில் ஆப்பிள் சைடர் வினைகரை நனைத்து மருக்களின் மீது தொடர்ந்து 3 முறை வைக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்துவர, நாளடைவில் மருக்கள் கருமை நிறமாக மாறும். பின்னர் அதை சுற்றியுள்ள தோல் வறண்டு பின்னர் மரு வேரோடு விழுந்து விடும்.
உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நாளடைவில் விழுந்து விடும்.
உருளைக்கிழங்கு சாறை மட்டும் இரவில் மருக்களின் மீது தடவி அடுத்த நாள் காலையில் கழுவ வேண்டும். அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
வெங்காயத்தின் மீது உப்பு தடவி அதன் சாறை மருக்கள் மீது தடவி வரலாம்.
கற்றாழை ஜெல்லையும் மரு உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்துவர நாளடைவில் மருக்கள் உதிர்ந்துவிடும்.
மருக்களை அகற்ற நீங்களாகவே எதையும் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com