ஏப்பம் வராமல் தடுப்பதற்கு உங்கள் அன்றாட வாழ்வில் சில பழக்க வழக்கங்களை முறைபடுத்தினாலே போதும்.
தினமும் நீங்கள் உட்கொள்ளூம் உணவை வேகவேகமாக சாப்பிடாமல், மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.
இரவில் தாமதமாக சாப்பிட நேரிட்டால் மசாலா அதிகமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
செரிமான பிரச்சனைகளை தவிர்க்க அதிக அளவில் கீரை வகைகள், சோம்பு, இஞ்சி,மிளகு, சீரகம், புதினா,பெருங்காயம், தயிர், பூண்டு முதலானவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
சோடா கலந்த பானங்கள், மது வகைகள், புகைப் பழக்கம் முதலானவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் லாக்டோஸ் இல்லாத பால் பொருட்களை முயற்சிக்கலாம்.
மனதை ஒருநிலைப்படுத்த தினமும் யோகா, தியானம் அல்லது உங்கள் மன விரும்பும் செயல்களில் ஈடுபடலாம்.
சாப்பிட்டவுடன் அதிக சத்தத்துடன், ஒருவித வாடையுடன் ஏப்பம் வருகிறது என்றால் அது வயிற்று புண், அஜீரணம், குமட்டல், நெஞ்செரிச்சலுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.