

தமிழ்நாடு அரசியலில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ள போதிலும், பிரதான போட்டி என்னவோ திராவிட ஜாம்பவான்களுக்கு இடையேதான் இருக்கும் என்று அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இளைஞர்களிடையே தவெகவிற்கு ஓரளவு ஆதரவு பெருகி வருவதாகவும் ஒரு சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கேட்பில், அப்பகுதியில் திமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது.
கிட்டத்தட்ட திமுக - அதிமுக இரண்டும் ஒரே நிலையில்தான் உள்ளன. இதனால் இந்தத் தேர்தலில் இருகட்சி இடையேயும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஆர். விஸ்வநாதன் எம்எல்ஏவாக இருக்கிறார்.