TN Assembly Election | திருவள்ளூர் மாவட்ட மக்களின் ஆதரவு யாருக்கு?

பெண்களுக்கு நன்றாக செய்கிறார். ஆட்சி நன்றாக செய்கிறார். உதவி செய்கிறார் அதனால் உதயசூரியனுக்கு தான் ஓட்டு.
TN Assembly Election | திருவள்ளூர் மாவட்ட மக்களின் ஆதரவு யாருக்கு?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 40 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் 18 பேரும், த.வெ.க.விற்கு தான் ஓட்டு என்று 27 பேரும் தெரிவித்தனர்.

பெண்களுக்கு நன்றாக செய்கிறார். ஆட்சி நன்றாக செய்கிறார். உதவி செய்கிறார் அதனால் உதயசூரியனுக்கு தான் ஓட்டு.

தமிழ்நாட்டை காப்பாற்ற தி.மு.க.வால் தான் முடியும். மகளிர் தொகை கொடுத்துள்ளார். இலவசமாக பஸ் விட்டு இருக்கிறார்கள். தி.மு.க.விற்கு தான் ஓட்டு போடுவோம் என்று தெரிவித்தனர்.

எப்போதும் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவோம் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.

முதல் தடவை விஜய் வருகிறார். வாய்ப்பு கொடுப்போம். முன்பு இரட்டை இலைக்கு போட்டோம். இப்போது விஜய்க்கு போடப்போகிறோம். இளைய தளபதியை தேர்ந்தெடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com