பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
20-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை 20-ந்தேதிக்கு பிறகு வழங்க முடிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
மழைநீர் தேக்கத்தால் டெங்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படையுங்கள்- பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது

புதிய மாவட்டங்களில் கடைசியாக இன்று 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.1000 ரொக்கம்-பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் எப்போது கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை தனியாகவும், ரொக்க பணம் ரூ.1000 தனியாகவும் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
2 கோடி கார்டுகளுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு- ரூ.2,363 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

பொங்கல் திருநாளையொட்டி 2 கோடி கார்டுகளுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
1,000 ரூபாய் பொங்கல் பரிசு- அரசாணை வெளியீடு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு

அரிசி ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் - மு.க.ஸ்டாலின்

சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க. தக்க பாடம் கற்பிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழக அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

மேயர். நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.