search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalitha birthday"

    • 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    • கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்.பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி.பரமசிவம்,எம்.கே.ஆறுமுகம்,ஜெயந்தி லோகநாதன், ஐ.டி. விங்க் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் சொக்கப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சுமார் 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேலைகள்,இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் குலாப்ஜான்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம், அரிகோபால்,பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் பானு பழனிசாமி ,தண்ணீர் பந்தல் நடராஜன்,பிரேமா , பழனிசாமி, ஐ.டி.விங்க் மிருதுளா நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை.
    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதற்கு முன்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப் 24-ந்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.

    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2 முறை பேசி உள்ளனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய மந்திரி பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் பேசுவதற்காக நாளை மறுநாள் பியூஷ்கோயல் சென்னை வருகிறார்.

    இதேபோல் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த 3 கட்சிகளும் அ.தி.மு.க.வில் அதிக தொகுதிகளை கேட்டு வருவதால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

    ஜெயலலிதா இருக்கும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் முன் கூட்டியே அறிவிப்பார்.


    அதே பாணியை இப்போதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளதால் 25 தொகுதிகளில் யார்-யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 20 பேர்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்றும் மேலும் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை முடிவு செய்து இறுதி செய்து விட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து 25 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டுள்ளனர்.

    இதனால் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிலர் போர்க்கொடி தூக்குவார்கள். இதை தவிர்க்க முன் கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகிறோம்.

    ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்கள் தேர்வில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இந்த தேர்தலிலும் பின்பற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #ParliamentElection
    கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 90 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர். #edappadipalanisamy #opanneerselvam

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்.அரங்கில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.

    இந்த திருமணங்களை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர்.

    இந்த திருமண விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அசோக்குமார் எம்.பி. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

    திருமணம் செய்த 90 ஜோடிகளில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு, கட்டில், மெத்தை, தலையணை, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், பீரோ, குடங்கள், அண்டா, பூஜை சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட 35 வகையான சீர் வரிசை பொருட்களாக மணமக்களுக்கு வழங்கப்பட்டன.

    மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், மணமகளுக்கு பட்டுச் சேலை மற்றும் துணிகளும் வழங்கப்பட்டன. #edappadipalanisamy #opanneerselvam

    ×