என் மலர்

  நீங்கள் தேடியது "மகேஷ் பாபு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.
  • இவர் தன்மீது அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.

  பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  பவித்ரா லோகேஷ் கன்னடம், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். பவித்ராவுக்கு 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர்.

   

  பவித்ரா லோகேஷ்

  பவித்ரா லோகேஷ்

  இந்நிலையில் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் பரப்பி வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.
  • இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா சமீபத்தில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.


  மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.


  பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.


  இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள்.


  நான் பார்த்த அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால், இதுவரை நான் உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

  அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன்பின், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  இந்நிலையில், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிருஷ்ணா இன்று உயிர்ழந்தார்.

  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

   

  அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 

   

   

  இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.

  நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

  தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் அறிவிப்பின்படி அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்த பின்னர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

  நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
  • இவர் தனது அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார்.

  தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


   ராஜமவுலி

  மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


   ராஜமவுலி

  இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி காலமானார்.
  • இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவரது தந்தை பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இவரது மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி. கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

   

  கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

  கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

  இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

   

  கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

  கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

  நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் தமிழ், கன்னட திரைப்பட நடிகர் நடிகைகள், மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
  • இவர் தனது அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

  தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


  ராஜமவுலி

  இந்நிலையில், இவர் அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜமௌலி, "தான் இயக்கும் அடுத்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும். இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

  மகேஷ் பாபு தற்போது இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து வருகிறார், எஸ்.எஸ்.எம்.பி. 28 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.
  • 2 படங்களில் இருந்து நடிகை பவித்ரா லோகேஷ் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

  கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  இந்தநிலையில் பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோஷகேசை படக்குழுவினர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது அவரை அந்த படங்களில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷ்
  • நடிகர் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி.

  தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நரேஷ். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். நரேஷுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் ரம்யா ரகுபதி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.


  நரேஷ் - ரம்யா ரகுபதி

  இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நரேஷ் – ரம்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் நடிகை பவித்ரா லோகேஷ் தான் எனவும் நரேஷும் பவித்ரா லோகேஷும் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல் வெளியானது.

  தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பவித்ரா லோகேஷ் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடிகை அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  நரேஷ் - பவித்ரா லோகேஷ்

  இந்நிலையில், நரேஷும் பவித்ரா லோகேஷும் மைசூர் ஹூன்சூர் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதை தெரிந்துகொண்ட நரேஷின் மனைவி ரம்யா நள்ளிரவு நேரத்தில் அவர்களின் ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார்.

  பின்னர் பலமுறை அறை கதவை தட்டியும் திறக்காத நிலையில் ரம்யா அறை வெளியே காத்திருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கே வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் நரேஷ் அறை கதவை திறந்து வெளியே வந்தபோது அவரை ரம்யா செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார்.


  செருப்பால் அடிக்க  முயன்ற ரம்யா

  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டுள்ளனர்.

  இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.

  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

  விக்ரம்

  விக்ரம்

  இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விக்ரம் திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''விக்ரம்.. ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு, விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது. இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

  விக்ரம்

  விக்ரம்

  அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை. உங்களுடைய பெஸ்ட் இது. இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo