என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஐ"

    • மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.

    விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

    இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.   

    • தனது வேலையை நிராகரித்ததால் ஆத்திரமடைந்தது.
    • பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது.

    ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் காலம் வரும் என்பது பலரின் அச்சம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏஐ அவ்வப்போது வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அந்த வகையில் தற்போது Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அண்மையில் MJ Rathbun என்ற Al Bot Agent பிரபல Data Visualisation தளமான Matplotlib க்காக Code களை உருவாக்கி தந்துள்ளது. ஆனால் ஏஐ உருவாக்கிய அந்த Code களை அதன் டெவலப்பரான ஸ்காட் ஷாம்பாக் சரியில்லை என கூறி நிராகரித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, டெவலப்பரைத் 'திறமையற்றவர்' என தனது சொந்த Blog Post இல் விமர்சித்து அதை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது. மேலும் தனது Code களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை அந்த ஏஐ மிரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. 

    • AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி
    • NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

    இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

    'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI-ன் அறிமுகத்தால், IT நிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன. இந்நிறுவனங்களின் Outsourcing சேவைகளை இந்த Al Chatbot-கள் மிகத் துல்லியமாகச் செய்து முடித்து, அதை நேரத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்வதால் மனிதர்கள் தலையீடு தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    • இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது.
    • பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    லூனா 9 (Luna 9) என்பது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். இது சோவியத் ஒன்றியத்தால் (தற்போதைய ரஷியாவால்) ஏவப்பட்டது. இந்த விண்கலம் 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அன்று நிலவின் 'மழைக்கடல்' (Oceanus Procellarum) பகுதியில் மென்மையாகத் தரையிறங்கியது.

    நிலவின் மேற்பரப்பில் இருந்து முதன்முதலில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது லூனா 9 விண்கலமே ஆகும். நிலவின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது அல்ல, அதில் விண்கலங்கள் புதையாமல் நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.

    இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது. இவை விரிந்து விண்கலத்தைச் சமநிலைப்படுத்த உதவின.இந்த விண்கலம் தரையிறங்கிய பின் சுமார் மூன்று நாட்களுக்கு இது பூமியுடன் தொடர்பில் இருந்து தகவல்களை வழங்கியது. அதன்பின்னர் பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    இந்த நிலையில், லூனா 9 விண்கலத்தை கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.

    நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் (LRO) மூலம் சந்திர மேற்பரப்பின் படங்களை ஸ்கேன் செய்ய, அவர்கள் YOLO-ETA (You-Only-Look-Once-Extraterrestrial Artifact) எனப்படும் மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தினர்.

    லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த லூயிஸ் பினால்ட் தலைமையிலான குழு, npj விண்வெளி ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து புதிய அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவர்களின் மாதிரியின் கணிப்புகள் விரைவில் சோதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    • கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள்.
    • கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் தேடு பொறி என்ஜின் மட்டுமின்றி யூடியூப், பிளேஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது.

    உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் வித்தியாசமாக கூகுள் யோசித்து தங்களுடைய ஊழியர்களை நீக்கம் செய்கிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் 'விருப்ப ஓய்வு' (பை அவுட்). சட்ட பாதுகாப்பு, நிறுவனத்தின் பெயரை பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்கள் மாற்று வேலை தேடுவதற்கு நேரம் அமைக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட மாத சம்பளம் மற்றும் பிற பண பலன்களை அளித்து வெளியேற்றுவதே விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும்.

    கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள். இதில் என்ஜினீயர்கள், தரவு ஆய்வாளர்கள், விளம்பர பிரிவு, வர்த்தக பரிவு உள்ளிட்டோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப ஓய்வு பெற்று குறிப்பிட்ட ஊழியர்கள் வெளியேறவில்லை என்றால் பணிக்கு லாயக்கில்லை என அந்த நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மறைமுகமாக அறிவித்திருந்தது. தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களுக்கு கூகுள் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் இந்த நடவடிக்கை குறித்து அவர் அறிவித்துள்ளார்.

    அதில் அவர் "2025-ம் ஆண்டில் நீங்கள் சாதித்த அனைத்தினாலும் நாம் இந்த ஆண்டை வலுவான நிலைப்பாட்டில் தொடங்குகிறோம். ஆனால் போட்டி நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சார வேகத்தைப் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவை தாராளமாக ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர் "நிறுவனம் செயல்பட வேண்டிய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், அல்லது நிறுவனத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம்" என்று அறிவித்துள்ளார். தீர்வு அணிகள், விற்பனை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எக்ஸ்ஏஐ (xAI) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார்.
    • இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடையும்.

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI செயலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு தொடங்கினார்.

    இந்நிலையில், எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, அவரது AI நிறுவனமான xAI நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    SpaceX மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே அதிக மதிப்பு மிக்க தனியார் நிறுவனம் என்ற பெயரை SpaceX பெறுகிறது. இதன்மூலம் X வலைதளம், Grok Al, Grokpedia என அனைத்தும் SpaceX நிறுவனத்தின்கீழ் செல்கிறது.

    • பேட்டரி செயல்திறன் நீட்டிக்கப்பட்ட உடற்பயிற்சிகளை ஆதரிக்கிறது.
    • இதனுடன் வழங்கப்படும் கேஸ் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மெட்டா கனெக்டில் உலகளாவில் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஓக்லி (Oakley) மற்றும் மெட்டா இந்தியாவில் ஓக்லி மெட்டா வான்கார்டு (Oakley Vanguard) ஏஐ ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது அதிக தீவிரம் கொண்ட விளையாட்டு மற்றும் வெளிப்புற பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட செயல்திறன் AI கண்ணாடிகளின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துகிறது.

    ஓக்லி மெட்டா வான்கார்டு

    ஓக்லி மெட்டா வான்கார்டு கடுமையான உடல் செயல்பாடுகளின் போது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் இயக்கத்தின் போது நிலையாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் சைக்கிள் ஓட்டுதல் ஹெல்மெட்கள் மற்றும் தலைக்கவசங்களுடன் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன. அவை IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இது ஈரமான, தூசி நிறைந்த மற்றும் அதிக வியர்வை சூழல்களில் செயல்பட உதவுகிறது.

    இந்த ரேப்-அரவுண்ட் ஃபிரேம் ஓக்லி PRIZM லென்ஸ் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. இது காற்று, சூரிய ஒளி மற்றும் குப்பைகளிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில் வேரியம்ட் மற்றும் வண்ண வரையறையை மேம்படுத்துகிறது. ஃபிரேம்கள் ஓக்லியின் த்ரீ-பாயிண்ட் ஃபிட் அமைப்பை பயன்படுத்துகின்றன. மேலும் பயனர்களுக்கு அதிக கஸ்டமைசேஷன் வழங்கும் நோக்கில், இது மூன்று விதமாக மாற்றக்கூடிய நோஸ் பேட்களை கொண்டுள்ளது.

    அம்சங்கள்:

    ஓக்லி மெட்டா வான்கார்டு, மெட்டா AI ஐ கார்மின் மற்றும் பிற ஆதரிக்கப்படும் உடற்பயிற்சி தளங்களுடன் ஒருங்கிணைக்கிறது. வாய்ஸ் கமான்ட் மற்றும் மெட்டா AI ஆப் மூலம் உடற்பயிற்சி தரவை ரியல்டைமில் பெற வழங்குகிறது. இந்தக் கண்ணாடிகளில் 12MP அல்ட்ரா-வைடு கேமராவும், 122-டிகிரி பார்வை புலமும், 3K தெளிவுத்திறன் வரை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வீடியோ பிடிப்பை ஆதரிக்கும்.

     

    ஆடியோ வெளியீடு ஓபன்-இயர் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்கப்படுகிறது, அழைப்புகள் மற்றும் குரல் தொடர்புகளின் போது காற்றின் குறுக்கீட்டைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட பல-மைக்ரோஃபோன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி செயல்திறன் நீட்டிக்கப்பட்ட உடற்பயிற்சிகளை ஆதரிக்கிறது. இதனுடன் வழங்கப்படும் கேஸ் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஓக்லி மெட்டா வான்கார்டு கலெக்ஷனின் ஆரம்ப விலை ரூ. 52,300 ஆகும். முன்னணி ஆப்டிகல் கடைகள், சன்கிளாஸ் ஹட் மற்றும் லென்ஸ்கிராஃப்டர்ஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்த வரிசையில் நான்கு ஃபிரேம் மற்றும் லென்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன:

    PRIZM 24K உடன் பிளாக் ஃபிரேம்

    PRIZM பிளாக் நிறத்துடன் வைட் ஃபிரேம்

    PRIZM ரோட் உடன் கூடிய பிளாக் ஃபிரேம்

    PRIZM சஃபையர் கொண்ட வைட் ஃபிரேம்

    • ஏற்கனவே தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு இது சரியான சிகிச்சை அல்ல.
    • இதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

    டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் பரிசோதனை மூலம் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டார்.

    ஆனால், அவர் மருத்துவரை அணுகாமல், ஏஐ சாட்போட் மூலம் சிகிச்சை முறைகளைத் தேடியுள்ளார்.

    ஏஐ-யின் ஆலோசனையின்படி, அவர் Pre-Exposure Prophylaxis (PrEP) எனப்படும் எச்.ஐ.வி தடுப்பு மருந்துகளை உட்கொண்டார்.

    ஆனால் இந்த மருந்துகள் எச்.ஐ.வி தொற்று இல்லாதவர்கள், அத்தொற்று வராமல் தடுக்க உட்கொள்ள வேண்டியவை. ஆனால், ஏற்கனவே தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு இது சரியான சிகிச்சை அல்ல.

    முறையற்ற அளவில் இந்த மருந்துகளை உட்கொண்டதால், அவருக்கு Stevens-Johnson Syndrome என்ற அரிய தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

    தற்போது அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    AI கருவிகள் பொதுவான தகவல்களை வழங்க முடியுமே தவிர, மருத்துவ ஆலோசனைகளுக்கு ஒருபோதும் AI-யை நம்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  

    • மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.
    • ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் உள்ளன.

    இந்தியாவின் 77வது குடியரசு தினம் கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்துக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.

    இரு நாடுகளின் மக்கள் நலனுக்காகவும், மாலத்தீவு மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

    ஆனால், அந்தப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 'Grok' ஏஐ, "மாலத்தீவு அரசு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டது" என்றும், குடியரசு தினத்திற்கு பதிலாக சுதந்திர தினம் என்றும் தவறாக மொழிபெயர்த்தது.

    ஏஐ கருவிகளை முழுமையாக நம்புவது ஆபத்தானது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

    • இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு.
    • இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது.

    OpenAI-ன் ChatGPT போன்ற தளங்கள் அமெரிக்காவிற்குள் இருந்தே இயங்கும் போது, அமெரிக்கப் பயனர்கள் இந்தியாவில் உள்ள AI சேவைகளுக்காக ஏன் 'பணம் செலுத்துகிறார்கள்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கேள்வி எழுப்பியுள்ளார்.

    "Real America Voice" நிகழ்ச்சியில் முன்னாள் வெள்ளை மாளிகை தலைமை உத்தி வகுப்பாளர் ஸ்டீவ் பேனனுடன் நடத்திய நேர்காணலில் பேசிய நவரோ, AI தளங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அங்கிருந்தே இயக்கப்படுகின்றன, ஆனால் அவை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயனர்களுக்குச் சேவை செய்கின்றன என்று வாதிட்டார்.

    அதாவது அமெரிக்காவின் வரிப்பணமும் முதலீடுகளும் அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வர்த்தகம் சார்ந்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "அமெரிக்கர்கள் ஏன் இந்தியாவில் இருக்கும் AI-க்காகப் பணம் செலுத்த வேண்டும்? ChatGPT அமெரிக்க மண்ணில் இயங்குகிறது, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெரும் பயனர்களுக்குச் சேவை செய்கிறது. எனவே, இதுவும் கவனிக்கப்பட வேண்டிய (தீர்வு காணப்பட வேண்டிய) மற்றொரு பிரச்சனையாகும்," என்று நவரோ கூறினார். 

    பீட்டர் நவரோவின் இந்த விமர்சனத்திற்கு இந்திய தரப்பில் வலுவான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு. மேலும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியப் பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது. இதனாலேயே பெரும்பாலான ஏஐ நிறுவனங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன. 

    • 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
    • எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.

    எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.

    மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன. 

    • Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு.
    • ஏஐ செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

    எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்தோனேசியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க முடியும் என்ற புகார்கள் சமீபகாலமாக உலகளவில் அதிகரித்தன.

    இதுதொடர்பாக, இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் (Meutya Hafid), "இந்த வகையான செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்று கூறி இந்தத் தடையை அறிவித்தார்.

    Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

    ×