IPL 2026 | குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்கு

குஜராத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
IPL 2026 | குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 42-வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

இதனால், பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

இதில், பெங்களூரு அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்துள்ளது.

இதில், அதிகபட்சமாக படிக்கல் 40 ரன்கள், விராட் கோலி 28 ரன்கள் எடுத்துள்ளனர். மற்ற வீரர்கள் 20க்கும் குறைவான ரன்களே எடுத்துள்ளனர்.

இந்நிலையில், 156 என்கிற வெற்றி இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com