அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய ஈரான் கால்பந்து வீரர்கள்!

தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர்.
Iranian Football Players
Iranian Football Players
Published on

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பெரும்பாலானோர் மாணவிகள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானின் மினாப் நகர் பள்ளி மீது இஸ்ரேல் -அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரான் கால்பந்து வீரர்கள் School Bag-களை கையிலேந்தி தேசிய கீதம் பாடி அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com