மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற இந்தியா கட்டாய வெற்றி பெற வேண்டும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகின்றன. இதில், லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

இந்தத் தொடரில் ஏ பிரிவில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றிரவு நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com