IPL 2026 | சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் CSK vs PBKS போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 30) தொடங்கவுள்ளது.
IPL 2026 | Ticket sales for the CSK vs PBKS match at Chepauk Stadium begin tomorrow
IPL 2026 | Ticket sales for the CSK vs PBKS match at Chepauk Stadium begin tomorrow
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் 2 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.

நாளை நடைபெறும் 3 ஆவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதையடுத்து ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 30) தொடங்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.இந்த போட்டிக்கான டிக்கெட்டின் விலை ரூ.2000 முதல் ரூ.8000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தான் விளையாடும் 14 போட்டிகளில் 7 போட்டிகள் உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கத்திலும், மீதமுள்ள 7 போட்டிகள் வெளியூரிலும் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com