விராட் இப்படி ஆடக்கூடியவரே இல்லை.. ரவி சாஸ்திரி

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் இப்படி ஆடக்கூடியவரே இல்லை.. ரவி சாஸ்திரி
Published on

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், விராட் கோலி அவுட் ஆன விதம் பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை குழம்ப செய்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறும் போது, "விராட் கோலி எப்போதும் இதுமாதிரி விளையாட மாட்டார்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com