மீண்டும் முதலிடம்.. ஐசிசி டாப் 10-இல் மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா

முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார்.
மீண்டும் முதலிடம்.. ஐசிசி டாப் 10-இல் மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா
Published on

ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளையாடிய இந்திய வீரர்கள் பலர் ஐசிசி ரேங்கிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும், ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கினார். இதே போன்று இளம் இந்திய அணி வீரர் திலக் வர்மா ஐசிசி டி20 ஆடவர் பேட்டிங்கில் டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார்.

இரண்டு சதங்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 280 ரன்களை குவித்து அசத்திய திலக் வர்மா கிட்டத்தட்ட 69 இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

டாப் 10 டி20 பேட்டர்கள் பட்டியலில் திலக் வர்மா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவர் தவிர டாப் 10 பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com