நத்தம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
vinayagar
விநாயகர்
Published on

விநாயகர்

நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவில் அருகில் உள்ள விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி இன்று காலை விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்தபட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப் போலவே கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதிகளிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com