திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
Thiruchendur temple
திருச்செந்தூர் கோவில்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com