அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா செல்கிறார்: மார்கோ ரூபியோ

பிரான்சில் நடந்த ஜி7 கூட்​டத்​தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை நேரில் சந்​தித்துப் பேசினார்.
trump, pm modi
Published on

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது என மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் பிரான்சில் நடந்த ஜி7 கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சந்​தித்துப் பேசினர். அப்​போது இந்​தியா-அமெரிக்கா இடையே மிகச்சிறந்த வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என அதிபர் டிரம்ப் அறி​வித்​தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்கோ ரூபியோ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம்.

நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது.

பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க ரீதியாக மிகவும் முக்கியம் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

கடந்த 2020 பிப்ரவரியில் அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com