

சீனாவின் சன்யா நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசப் அலி சர்தாரி, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் ஜியாங் பின்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
மொத்தம் எட்டு PNS ஹங்கோர் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க உள்ளதாகவும், அதில் நான்கு கப்பல்கள் சீனாவிலும் மற்ற நான்கு கப்பல்கள் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சீனாவிடம் இருந்து போர் விமானங்கள், தொலைதூர ஏவுகணைகள், பாதுகாப்பு பீரங்கிகள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
தற்போது சீனாவுடன் ஒப்பந்தமாகியுள்ள PNS ஹங்கோர் நீர்மூழ்கி கப்பல் திட்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான கடல்வழி தளத்தில் அச்சுறுத்தலை அதிகரிக்க கூடியதாக உள்ளது.