

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் மிக உயரிய விருது, "தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ்," வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது பிதமர் நரேந்திர மோடி பெறும் 33-ஆது சர்வதேச அங்கீகாரம் ஆகும்.
பர்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்லோவாக்கியா நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
பிரதமர் பதிவு:
விருது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இன்று மாலை பிரடிஸ்லாவாவில் தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் விருதை பெற்றுக் கொண்டது பெருமையளிக்கிறது.
140 கோடி இந்தியர்களுக்கு சொந்தமான இந்த விருதை பெற்றுக் கொண்டதற்கு ஸ்லோவாக்கிய மக்கள் மற்றும் அரசுக்கு நன்றிகள். இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா நட்புக்கு இந்த விருதை நான் அர்ப்பணிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
மிக உயரிய விருது:
தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் ஸ்லோவாக்கியா சார்பில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும். ஐரோபா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரடிஸ்லாவாவுக்கு சென்றுள்ளார். இந்த ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் தெய்த முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையே பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் கூட்டண்மையை வலியுறுத்தும் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.