

பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார்.
பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்த உடனேயே, அந்நாட்டின் விமானப்படையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாகப் பறந்து விமான நிலையம் வரை அழைத்து வந்தன. இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ விமான நிலையத்திற்கே நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்ததார்.
வர்த்தகம், ராணுவப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்துப் பிரதமர் உரையாடுகிறார்.
இதற்கிடையே, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா' பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார்.
இந்நிலையில், அதிபர் பிரபாவோ சுபியாண்டோ, இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தான் அடிபுர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா பதக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவித்து கவுரவித்தார்.
இந்த விருந்தானது இந்தோனேசியாவின் ஒற்றுமை, தொடர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்காற்றிய தனி நபர்களுக்கு வழங்கப்படும் ஒன்றாகும்.
இந்தோனேசிய அரசின் வழக்கப்படி வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க அதிபர் வரவேண்டியதில்லை. ஆனால் பிரதமர் மோடிக்காக மரபை மீறி அதிபரே நேரில் வந்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.