ஈரான் போர் விமானங்களுக்கு பாகிஸ்தான் படைத்தளத்தில் அடைக்கலம் - பரபரப்பு தகவல்

இதேபோல், தனது சில சிவிலியன் விமானங்களை அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் போர் விமானங்களுக்கு பாகிஸ்தான் படைத்தளத்தில் அடைக்கலம் - பரபரப்பு தகவல்
Published on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான், ஈரானிய போர் விமானங்களுக்குத் தனது விமானப்படைத் தளத்தில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களிலிருந்து தங்கள் உயர்ரக ராணுவ விமானங்கள் சிலவற்றை பாதுகாக்க அவற்றை பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகமேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஈரானிய விமானப்படையின் RC-130 மற்றும் லாக்ஹீட் நிறுவனத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், தனது சில சிவிலியன் விமானங்களை அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான், ஈரானுக்கு இவ்வாறு ராணுவ ரீதியாக உதவுவது அதன் நடுநிலைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய சகாவான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், "இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் வகிக்கும் பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஈரான் முன்வைத்த போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஈரான் பிரதிநிதிகள் அளித்த பதிலைப் படித்தேன்.

அது எனக்குப் பிடிக்கவில்லை, அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com