

பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதுமாக வர்த்தக இருப்புகளையே சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் கையிருப்பு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
வலுவான நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கி, வரிகளைச் சீரமைப்பதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவால் முடிகிறது.
எங்களிடம் மூலோபாய எண்ணெய் இருப்பு எதுவுமில்லை, வணிக ரீதியான இருப்பு மட்டுமே உள்ளது.
60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது உடனடியாக விடுவிக்கும் நிலையில் உள்ள இந்தியாவைப் போல நாங்கள் இல்லை என தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.