

ஈரான்மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் உலக நாடுகள் இணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் இருந்து இந்த அழைப்பை விடுத்த அவர்,
"ஈரான் முழு உலகையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. மற்ற நாடுகளின் தலைவர்களும் இப்போரில் இணைவதற்கான நேரம் இது. அவர்களில் சிலர் இந்தத் திசையில் நகரத் தொடங்கியிருப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது." என தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் ஈரான்மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்தன அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஈரானும் இருநாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள மற்ற நாடுகள்மீதும் தாக்குதலை தொடர்ந்துவருகிறது.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்த போரில் ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் ஈரான் தாக்குதலை கைவிடமால் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.