இஸ்ரேல் அணுசக்தி நிலையம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்..100-க்கும் மேற்பட்டோர் காயம் | Iran Attack

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளன.
டிமோனா
டிமோனா
Published on

ஈரான் - இஸ்ரேல்,அமெரிக்கா இடையேயான போர் 23வது நாளை எட்டியுள்ளது. நேற்று ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படவில்லை என்றும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்தது.

இந்த சூழலில் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் அணுசக்தி நிலையம் அருகே ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா பகுதியில் அமைந்துள்ள 'ஷிமோன் பெரஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தை' இலக்கு வைத்து ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆனால் ஏவுகணை ஏவுகணைகள் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த தாக்குதலில் டிமோனோ மற்றும் அருகில் உள்ள அராத் நகரில் மொத்தம் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளன.

இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாகத் தரைப் பகுதியில் விழுந்து வெடித்ததை இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் டிமோனா அணுசக்தி மையத்திற்கு நேரடிப் பாதிப்போ அல்லது கதிர்வீச்சு கசிவோ ஏற்படவில்லை என தாக்குதலுக்கு பிந்தைய சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com