ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் | Natanz

தாக்குதலினால் கதிர்வீச்சு அபாயம் ஏதுமில்லை என்றும் ஈரான் அணுசக்தி அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் | Natanz
Published on

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் இன்று (மார்ச் 21) காலை, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் அணுசக்தி அமைப்பு இதை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நிலையத்தின் அணுசக்தி செறிவூட்டல் மையம் குறிவைக்கப்பட்டதாகவும், இருப்பினும் தாக்குதலினால் கதிர்வீச்சு அபாயம் ஏதுமில்லை என்றும் ஈரான் அணுசக்தி அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது சர்வதேச அணுசக்தி ஒப்பந்த விதிகளை மீறிய செயல் என்றும் அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 போர் தொடங்கிய பின்னர் இந்த நிலையம் தாக்கப்படுவது இது 2வது முறை. முன்னதாக நடந்த தாக்குதலின் சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ஈரான் - இஸ்ரேல் இடையே நீடித்த 12 நாள் போரில் அமெரிக்கா இந்த நிலையும் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் இந்த நிலையம் குறிவைக்கப்படுவது கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com