Iran War | இந்திய பெருங்கடலில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல்: ஈரானுக்கு இங்கிலாந்து கண்டனம்

இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்கா- இங்கிலாந்து ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது
Iran War | இந்திய பெருங்கடலில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல்: ஈரானுக்கு இங்கிலாந்து கண்டனம்
Published on

இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்கா- இங்கிலாந்து ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயற்சித்த நிலையில், பொறுப்பற்ற தாக்குதல் என இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் எல்லையில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ளது இங்கிலாந்தின் டியாகோ கார்சியா தீவு. இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த இங்கிலாந்த அனுமதித்திருந்தது.

டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளம், மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதில் அமெரிக்காவிற்கு உதவுகிறது.

இங்கிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய குண்டு வீச்சு விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் போர்க் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

போர் தொடங்கிய சில நாட்களில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்ததில் 84 பேர் பலியானார்கள். இதற்கு பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடலில் அமைந்த்துள்ள இந்த தீவை ஈரான் தாக்கியுள்ளது.

இதற்குதான் இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com