இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

லெபனான் மீதான தாக்குதல்களை தொடர்ந்தால், மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!
Published on

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் லெபனான்மீது தாக்குதல்களை தொடர்ந்தால் மிக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இருநாடுகளும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என ட்ரம்ப் கேட்டிக்கொண்டிருந்தநிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு முதல்முறையாக, லெபானான்மீதான தாக்குதல்களால், இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மேற்கு மற்றும் மத்திய ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது.

இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com