Trade Deal | விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி தகவல்

அந்த ஆற்றல் முழுமையாக உணரப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.
Trade Deal | விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி தகவல்
Published on

இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு "மிகவும், மிகவும் நெருக்கமாக" உள்ளன என்றும், அந்தக் கடைசித் தடையையும் கடக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு துறை துணை செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் கூறியுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இரு தரப்பினரும் ஒரு முடிவுக்கு வந்து, நிகழ்ச்சி நிரலில் உள்ள மற்ற பல பிரச்சினைகளுடன் முன்னேறுவது முக்கியம் என்றும் லண்டாவ் கூறினார்.

"உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிவோம். அந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒரு இறுதி தீர்வை காண்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம் என்று பல மாதங்களாக பேசி வருகிறோம், நாங்கள் மிகவும் நெருங்கிவிட்டோம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், நாம் அந்தக் கடைசி தடையைக் கடக்க வேண்டும்," என்று லண்டாவ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா உலகின் பெரும் வல்லரசுகளில் ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா.

மேலும், இந்தியாவிடம் அபாரமான பொருளாதார ஆற்றல் உள்ளது. ஆனால், வெளிப்படையாக சொல்வதானால், இந்தியா பின்பற்ற தேர்ந்தெடுத்த பொருளாதார மாதிரிகளின் காரணமாக, பல தசாப்தங்களாக அந்த ஆற்றல் முழுமையாக உணரப்படவில்லை என்றே நான் கருதுகிறேன், என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com