

வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இரு தரப்புக்கும் தொடர்பான சில அம்சங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
சட்டப்பூர்வமான ஆவணத்தின் எஞ்சிய 1 அல்லது 2 சதவீத அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுடன் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான உறவை வலுப்படுத்துவதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, பிரதமர் மோடியை சந்தித்தபோது அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம். வரும் டிசம்பர் மாதம் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அமெரிக்காவுக்கு வர உள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு அந்த பயணம் நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.