

ஈத் பெருநாள் மற்றும் ஈரானிய புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஈரான் மத்திய கிழக்கில் நடத்தும் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த மோடி, சர்வதேச போக்குவரத்து பாதைகள் சீராக இருக்க வழிவகை செய்ய வேண்டும் என பெசஸ்கியானிடம் கேட்டுக்கொண்டார்.
அதிகரித்து வரும் பிராந்திய சர்வதேச பதற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மசூத் பெசஸ்கியான் மோடியிடம் பேசுகையில், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் - அமெரிக்கா தங்களின் சட்டவிரோத தாக்குதல்களை நிறுத்துவது ஒன்றே வழி என வலியுறுத்தினார்.
இந்த விஷயத்தில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ முடியும் என்றும் அந்த அமைப்பு நடுநிலையுடன் யவரையும் சாராமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் தெற்கு ஆசியாவை உள்ளடக்கிய புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என யோசனையையும் பெசஸ்கியான் முன்வைத்தார்.
பிரதமர் மோடி பிரதானமாக, போருக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பையும், ஏற்றுமதி வழித்தடங்கள் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் பெசஸ்கியானிடம் வலியுறுத்தினார்.
உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு பிரிக்ஸ் ஆகும்.
2009 முதல் இதன் வடாந்திர உச்சி மாநாடு நடந்து வருகிறது. பலமுறை இந்தியா இந்த மாநாடுகளுக்கு தலைமை தாங்கி உள்ளது.