ஒப்பந்தம் ஏற்பட்டால் 30 நாட்களில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படலாம்

மேலும் ஈரான் போக்குவரத்து கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும் என்றும் நிக்கேய் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் ஏற்பட்டால் 30 நாட்களில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படலாம்
Published on

இரு நாடுகளும் பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டிய சுமார் 30 நாட்களுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் விவாதித்து வருவதாக, மத்திய கிழக்கு தூதரக வட்டாரத்தை மேற்கோள் காட்டி நிக்கேய் செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, 30 நாள் காலக்கெடுவுக்குள் ஜலசந்தியில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியை ஈரான் மேற்கொள்ளும் என்றும், அதன் பிறகு அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என்றும், மேலும் ஈரான் போக்குவரத்து கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும் என்றும் நிக்கேய் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும், இந்த இரண்டு மாத இடைநிறுத்தத்தின் போது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com