இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி... 2 பேர் காயம்

துருக்கியில் இஸ்ரேல் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.
Gunfire at Israeli Embassy — One Dead, Two Injured
Published on

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலில் தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் ஒருவர் மட்டும் இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் மற்றும் குறிப்பாக காசா பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்து வரும்நிலைஐயில், சமீப காலமாக இருநாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் மோசமடைந்துள்ளன.

இதனால் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டிலுள்ள பிற வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com