என் மலர்
உலகம்

அமெரிக்காவில் 10 கோடியை தாண்டியது கொரோனா
- தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது.
- இது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள் ஆகும்.
வாஷிங்டன் :
உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.
அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும்.
இந்தத் தொற்றால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது. அங்கு இதுவரை சரியாக 10 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் இறந்துள்ளனர்.
இது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள் ஆகும்.
Next Story






