ரஷிய ராணுவ வீரர்களுக்கு ரகசியமாக பயிற்சி அளித்த சீனா: ஐரோப்பிய உளவு அமைப்பு தகவல்

ராணுவ பயிற்சியில் உயிரியல், கதிர்வீச்சு மற்றும் ரசாயன போர் உக்தி முறைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
China secretly trained Russian troops
Published on

சீனாவுடன் ரகசியமாக போர் பயிற்சி செய்த ரஷியா:

கடந்த ஆண்டு ரஷிய ராணுவ படைகளுக்கு சீனா ரகசிய ராணுவ பயிற்சியை அளித்ததாகவும், இந்த பயிற்சியில் நான்கு ரஷிய மற்றும் சீன தளபதிகள் நேரடியாக ஈடுபட்டதாகவும் ஐரோப்பிய உளவு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷிய ஆயுதப் படைகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று, மக்கள் விடுதலை ராணுவத்தின் பயிற்சி மையங்களில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு பயணம் செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் அளிக்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சியில் உயிரியல், கதிர்வீச்சு மற்றும் ரசாயன போர் உக்தி முறைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களுக்கு சீனா பயிற்சி அளித்தது. அவர்களில் சிலர் உக்ரைனில் நடக்கும் போரில் இணைந்துள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டுக்கு எதிரான போர் தொடர்பான பயிற்சியில் இத்தகைய உயர் பதவியில் உள்ளவர்கள் ஈடுபட்டிருப்பது, ஐரோப்பா அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரில், தாங்கள் நடுநிலை வகிப்பதாகவும், தன்னை ஒரு சமாதான மத்தியஸ்தராக முன்னிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com