ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. டெல்லி வரை அதிர்வு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 5.5, 4.3, 4.5, 4.7 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்த 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Published on

வெனிசுலாவில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 920 பேர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 215 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிர்வு

பூமிக்கு மிக ஆழத்தில் ஏற்பட்டால் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தள்ளியுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய தலைநகர் டெல்லி உட்பட வட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள், சொத்து சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மாலை ஏற்பட்ட நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 5.5, 4.3, 4.5, 4.7 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்த 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com