பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 3 குழந்தைகள் உட்பட நால்வர் பலி | Pak-Afgan conflict

பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 3 குழந்தைகள் உட்பட நால்வர் பலி | Pak-Afgan conflict
Published on
Summary

ஏற்கனவே மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

எல்லையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறினாலும் இதில் அப்பாவி பொதுமக்கள் தான் உயிரிழப்பதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியான கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தகவல்படி, அங்கு குர்பஸ் மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தில் பாகிஸ்தான் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிரிழந்தனர்.

கோஸ்ட் மாகாணத்தின் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.

அருகில் உள்ள மற்றொரு கிராமத்தின் சந்தை மற்றும் மருத்துவக் கிளினிக் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கோஸ்ட் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com