புராதன, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க இளம் தலைமுறை முன்வர வேண்டும்- வெங்கையா நாயுடு

சென்னையில் நடைபெற்ற புத்தக் வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, புராதன, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க இளம் தலைமுறை முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
Published on

சென்னை:

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது குறித்த நூலை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும், தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. எந்த மொழியையும் திணிக்க கூடாது, எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது.

குழந்தைகளுக்கு நம் புராதனங்கள், இதிகாசங்களை கற்றுக்கொடுக்க வேண்டும், வரலாற்றை அறியும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்தியா வளம் நிறைந்த நாடு. வெளிநாட்டு அறிஞர்கள் இந்தியாவின் பெருமையை எழுதி உள்ளனர். நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருகிறார்.

இந்து என கூற பலரும் தயங்குவது ஏன்? நாட்டில் 80 விழுக்காடு மக்கள் இந்துக்கள். இளம் தலைமுறையினர், புராதன, வரலாற்றுச் சின்னங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வேண்டும். நாட்டின் கலாச்சாரத்தை இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com