

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பாபனிப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் அடுத்த முதலமைச்சராக அறியப்படும் சுவேந்து அதிகாரி என்பவரின் உதவியாளர் சந்திரநாத் ராத், பர்கானாஸ் மாவட்டத்தில் காரில் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சுவேந்து அதிகாரி, “தெளிவாக திட்டம் தீட்டி நடத்தப்பட்டுள்ள இந்த கொலை சம்பவத்தில், ஆரம்ப காலத்திலிருந்தே தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் திரிணாமூல் காங்கிரஸ் குறித்து, இப்போதைக்கு எந்தவித கருத்தும் என்னால் கூற முடியாது. காவல்துறை தலைமை இயக்குநர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
இதைப்போன்ற சம்பவம் கடந்த 2013ஆம் ஆண்டும் நிகழ்ந்துள்ளது. அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த சுவேந்து அதிகாரியின் உதவியாளர் பிரதீப் ஜா, அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், தற்போது மீண்டும் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது.