மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்தது பசுவதை தடுப்பு சட்டம் - பாஜக அதிரடி

பசுவதை தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது மேற்குவங்க அரசு
மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்தது பசுவதை தடுப்பு சட்டம் - பாஜக அதிரடி
Published on

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்றுள்ளார்.

இதை தொடர்ந்து பசுவதை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை பாஜக தலைமையிலான அரசாங்கம் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி எந்தவொரு விலங்கும் முறையான ஆவணம் இல்லாமல் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

14 வயதான விலங்குகள், வயது முதிர்வு, பிறவி ஊனம் மற்றும் தீராத நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளான விலங்குகளை தவிர, எந்தவொரு விலங்கும் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் பொதுவெளியில் விலங்குகளை வெட்டவும் தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com