த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு? - அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் விளக்கம்

முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை, மேலும் அதிமுக கட்சியில் எந்தவித பிளவும் இல்லை என்றார் கோவை சத்யன்.
த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு? - அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் விளக்கம்
Published on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், 108 தொகுதிகளை கைப்பற்றியுள்ள தமிழக வெற்றி கழகம், அதன் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியை அமைக்க பல அரசியல் கட்சிகளின் உதவியை நாடியுள்ளது.

இந்த நிலையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கோரியுள்ளது.

மேலும், பா.ஜ.க கூட்டணி அல்லாத அ.தி.மு.க.வை மட்டுமே, விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், ”முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, இறுதியான முடிவை த.வெ.க தலைவர் விஜய் தான் சொல்ல வேண்டும். எங்களின் அ.தி.மு.க கட்சியில் எந்தவித பிளவும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com