

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மிகப்பெரிய வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. இந்த வன்முறை குறித்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஜோய் பால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கறிஞராக ஆஜரான மம்தா, “வங்காள மக்களை பாதுகாக்க வேண்டும். மேலும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
கடந்த 1982ஆம் ஆண்டு ஜோகேஷ் சந்திரா சட்டக் கல்லூரியில் தனது சட்டபடிப்பை முடித்த மம்தா, நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜரானார்.
மேலும் நீதிமன்றத்தில் வாதாடிய அவர், “இறந்த பத்து நபர்களில் ஆறு நபர்கள் இந்துக்கள். தயவுசெய்து காவல்துறையினரிடம் ஒழுங்காக நடந்துகொள்ள சொல்லுங்கள்.
காவலர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. என் குடும்பத்தில் 12 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்” என்றும் வாதாடினார்.