பாகிஸ்தான், வங்கதேச ஊடுருவலை கட்டுப்படுத்த 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம்: அமித் ஷா

6,000 கி.மீ எல்லைகளைப் பாதுகாக்க, இந்தியா விரைவில் 'ஸ்மார்ட் பார்டர்' திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேச ஊடுருவலை கட்டுப்படுத்த 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம்: அமித் ஷா
Published on

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான 6,000 கி.மீ. எல்லைப் பகுதிகளை ஊடுருவ முடியாததாக மாற்றுவதற்கும், அப்பகுதிகளின் மக்கள் தொகை அமைப்பை மாற்றும் 'சதியை' முறியடிப்பதற்கும், அடுத்த ஆண்டு 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்திய வருடாந்திர ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவில் உரையாற்றிய அமைச்சர், நாட்டிற்குள் ஊடுருவும் ஒவ்வொருவரையும் அரசாங்கம் கண்டுபிடித்து இந்தியாவிற்கு வெளியே அனுப்பும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் தனது அமைச்சகம் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தும் என்றும் ஷா கூறினார்.

அடுத்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் எல்லைகளில் ஒரு "வலுவான பாதுகாப்பு வலையமைப்பை" உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த "ஸ்மார்ட் எல்லை" தொழில்நுட்பத்தின் உதவியுடன், ட்ரோன்கள், ரேடார்கள் மற்றும் ஸ்மார்ட் கேமராக்களால் வலுப்படுத்தப்படும் என்றும், இது ஊடுருவ முடியாத எல்லையை உருவாக்க உதவும் என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com