இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா - ஒரே நாளில் 93,045 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

லண்டன்:

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் அதிகபட்சமாக 93,045 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 111 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com