அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து சென்னையில் ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் வி.சி.க கட்சி நிர்வாகி இல்ல விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் வெளிநாடு பயணம் செய்து தொழில் முதலீட்டாளர்களை தமிழகம் நோக்கி கொண்டு வருவது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொருத்து இருந்து பார்போம். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து கடந்து ஆந்திரா ஸ்ரீசிட்டிக்கு சென்று விட்டன.

தமிழக ஆற்றுநீர் பிரச்சனை, அரசியல் நெருக்கடிகள், நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழகம் தொழில் வளத்தில் பின்தங்கி உள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றது. வெளிநாட்டிற்கு முதல்வர் அரசு சுற்று பயணமாக செல்லமுடியும். எதிர்கட்சி தலைவர்கள் அரசு பயணம் செல்ல முடியாது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு சார்பில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எனது தலைமையில் சென்னையில் வருகிற 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com